ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகள்!

parama guru masterஎமது கல்லாரியின் முன்னாள் ஆசிரியர் திரு. கந்தசாமி பரமகுரு (முன்னாள் கொத்தணி அதிபர் நாகர்கோவில், முன்னாள் உதவிக்கல்விப்பணிப்பாளர் பருத்தித்துறை கோட்டம்) அவர்கள் 25.11.2013 சிவபதமடைந்தார். இவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கையாக்கின்றோம்.

கல்லூரி அதிபரினால் 11-11-2013 அன்று நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெளியிடப்பட்ட ஆண்டறிக்கை

ccpg 2013 (39)எமது இன்றைய நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வருகை தந்து சிறப்பித்துக் கொண்டிக்கும் எங்கள் வலயக்கல்விப்பணிப்பாளர் அன்பிற்கும், பெருமதிப்பிற்குமுரிய உயர் திரு. நந்தகுமார் அவர்களே சிறப்பு விருந்தினர் மருதங்கேணி கோட்டக் கல்விப்பணிப்பாளர் பெருமதிப்பிற்குரிய பொன்னையா அவர்களே ஆசியுரை வழங்கி அமர்ந்துள்ள சிவஸ்ரீ சோ தண்டபாணிக தேசிகர் ஐயா அவர்களே நிறுவுனர் பேருரை வழங்க இருக்கும் எமது பழைய மாணவர் சங்கத்தின் உபதலைவர் திரு. சிவா கிருஷ்ணமுர்த்தி அவர்களே

நிறுவுநர் தினமும் பரிசளிப்பு விழாவும் -2013

ccpg 2013 (26)எமது கல்லூரியின் 2012 ஆம் ஆண்டிற்கான பரிசளிப்பு மற்றும் நிறுவனர் தின விழா  இன்று(11-11-2013) திங்கட்கிழமை பாடசாலை அதிபர் திரு.கி.இராஜதுரை அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ் நிகழ்வின் பிரதம விருந்தினராக திரு.சிவபாதம் நந்தகுமார் (வலயக் கல்விப் பணிப்பாளர், வடமராட்சி) அவர்களும், மற்றும் சிறப்பு விருந்தினராக திரு.கந்தர் பொன்னையா (கோட்டக் கல்விப் பணிப்பாளர், மருதங்கேணி) அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

வடமராட்சி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்டச்சுற்றுத்தொடரில் இன்று நடைபெற்ற போட்டிகளில் 14 ஆம் மற்றும் 16 வயதுப்பிரிவுகள் வெற்றிபெற்றது.

வடமராட்சி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்டச்சுற்றுத்தொடரில் இன்று(06-11-2013) நடைபெற்ற  16 வயதுப்பிரிவிற்கான  சுற்றுப்போட்டி இமையாணன் இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. இதில் எமது கல்லூரி பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியுடன் மோதியதில், 1:0 என்ற கோல் கணக்கில் ஹாட்லிக் கல்லூரியை வென்றது.

பழையமாணவர் சங்கம் வெளியிட்டுள்ள கணக்கறிக்கை [10/02/2013 - 31/07/2013]

ppa vvt ac 2013 1கணக்காய்வு செய்யபட்ட கணக்கறிக்கை மாதாந்த நிர்வாகசபை கூட்டத்தில், சமர்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. 10.02.2013 இல் தாம் பொறுப்பேற்றது முதல் 31.07.2013 வரையான வரவு செலவு விபரங்கள் உள்ளடக்கபட்டு வெளியிடப்பட்டுள்ள முதலாவது கணக்கறிக்கை.

சேவையிலிருந்து ஓய்வு பெறும் சிரேஸ்ட கணித பாட ஆசிரியரான திரு. த. பாலச்சந்திரன் அவர்களது பிரிவுபசார விழா

bSC 4803எமது பாடசாலையில் 11 ஆண்டுகளுக்கு மேலாக சேவையாற்றி இன்று(25-10-2013 ) தனதுசேவையிலிருந்து ஓய்வு பெறும் சிரேஸ்ட கணித பாட ஆசிரியரான திரு. த. பாலச்சந்திரன் அவர்களது பிரிவுபசார விழாவானது இன்று பாடசாலைமண்டபத்தில் நடைபெற்றது.

கல்விஅமைச்சு மற்றும் சுகாதார அமைச்சும் இணைந்துநடாத்திய வடமராட்சி வலய தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் சுகாதார மருத்துவக்கண்காட்சி

2013-10-23 10.30.47கல்விஅமைச்சு மற்றும் சுகாதார அமைச்சும் இணைந்து நடாத்திய வடமராட்சி வலய தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் சுகாதார மருத்துவக்கண்காட்சி பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரியில் 23-10-2013 அன்று நடைபெற்றது. எமது கல்லூரி மாணவர்களின் உருவாக்கப்பட்ட ஆக்கங்களும் இதில் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும் இக்கண்காட்சி நிகழ்வின் நிறைவாக இடம்பெற்ற கலாச்சார நிகழ்வில் எமது கல்லூரி மாணவர்களால் ஆற்றுகை செய்யப்பட்ட நாடகம் இரண்டாம் இடத்தைப்பெற்றுக்கொண்டது.