இல்லமெய்வன்மை போட்டி-2015

Sports 2014 19கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி பாடசாலையின் அதிபர் கி.இராஜதுரை தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கப்டன் சின்னத்துரை சிவநேசன் ( யா/சிதம்பரக் கல்லூரி பழைய மாணவர் ) அவர்கள் கலந்து சிறப்பித்தார். பி.ப 1.30 மணியளவில் ஆரம்பமாகிய நிகழ்வில் பாடசாலை அதிபர் மற்றும் விருந்தினர்கள் ஊரிக்காடு ஸ்ரீ சுந்தரப் பெருமாள் ஆலயத்திலிருந்து பாடசாலை பாண்ட் வாத்தியத்துடன் கல்லூரி மைதானத்திற்கு அழைத்துவரப்பட்டனர். மங்கள விளக்கேற்றல், கொடியேற்றல், தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் பாடசாலைக் கீதத்துடன் போட்டிகள் ஆரம்பமாகியது.

வருடாந்த மரதன் இன்று(16-01-2014) நடைபெற்றது

கல்லூரியின் வருடாந்த மரன் ஓட்டம் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. காலை 7 மணியளவில் நெடியகாடு கணபதி படிப்பகத்துக்கு முன்பாக ஆரம்பித்த மரதன் ஓட்டம் வல்வை சந்தி, உடுப்பிட்டிச் சந்தி, தொண்டைமானாறு வழியாக சிதம்பரகல்லூரி முன்றலை வந்தடைந்தது.

க.பொ.த உயர்தர வர்த்தகப் பிரிவில் 12 மாணவர்கள் சித்தி.

AL-result2014 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் எமது கல்லூரியில் வர்த்தகப்பிரிவில் பரீட்சைக்கு தோற்றிய 13 மாணவர்களில் 12 மாணவர்கள் மூன்று பாடங்களில் சித்தியடைந்துள்ளனர். இதில் இரண்டு மாணவர்கள் 2A, B பெற்று பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெறும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

நிறுவுநர் தினமும் பரிசளிப்பு விழாவும் -2014

ccpg 2013 (26)சிதம்பராக் கல்லூரி வருடாந்த பரிசில் வழங்கும் வைபவம் மற்றும் நிறுவனர் தினமும் இன்று(15-11-2014) மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. கல்லூரி அதிபர் திரு.கி.இராசதுரை அவர்கள் தலமையில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு,

சிதம்பராக்கல்லூரி தொடர்பான Sunday Times பத்திரிகையில் வெளியான கட்டுரை.

கடந்த அக்டோபர் மாதம் 26 ஆம் திகதி 2014 அன்று இலங்கையின் பிரபல ஆங்கில பத்திரிகையான Sunday Times இல் வெளியான எமது கல்லூரி தொடர்பான கட்டுரை.

CC sundaytimes

தேசியமட்டம் மற்றும் மாகாணமட்ட பாடசாலைகளுக்கிடையிலான பளுத்தூக்கல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள் பாடசாலை சமூகத்தினரால் கௌரவிக்கப்பட்டனர்.

2யா/ சிதம்பராக்கல்லூரியில் இருந்து  தேசிய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான பளுத்தூக்கல் போட்டியில் 19 வயதின் கீழ் பெண்களுக்கான 63 கிலோகிராம் நிறைப் பிரிவில்  3ம் இடத்தைப் பெற்ற  மாணவி செல்வி இராமகிருஸ்ணன் தசாந்தினி அவர்களையும்...