வல்வெட்டித்துறை சிதம்பராக்கல்லூரி பழையமாணவர் சங்க முதலாவது நிர்வாகசபை கூட்டம் – 25-02-2013

26-02-20131வல்வெட்டித்துறை சிதம்பராக்கல்லூரி பழையமாணவர் சங்கத்தின் முதலாவது மாதாந்த நிர்வாகசபைக்கூட்டம் கல்லூரிமண்டபத்தில் 25-02-2013 திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. மேலும் இக்கூட்டத்தில் சிதம்பராக்கல்லூரியின் கல்வி மற்றும் இணைபாடவிதான செயற்பாடுகள் தொடர்பான தேவைகள் கலந்துரையாடப்பட்டு முடிவுகள் எட்டப்பட்டது. 

சிதம்பராக்கல்லூரி பெண்கள் கழிப்பறை அமைக்கும் வேலைகள் பூர்த்தியாகியுள்ளன.

DSC 0593காற்றோட்டமுள்ள இலகுவாக பராமரிக்ககூடிய பெண்கள் கழிப்பறை நாற்பது நாட்களில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் அமைக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகரசபைக்குட்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரேயொரு உயர்தர விஞ்ஞான பாடசாலையில், பாடசாலைச்சமூகத்தினர் எதிர்கொள்ளும் சிரமங்களை பெற்றோர்கள் தெரிவித்ததை கருத்திற்கொண்டு இத்திட்டம் மிக விரைவாகவும் அர்ப்பணிப்புடனும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆண்கள் கழிப்பறை அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெறுகின்றது.

நவீன விஞ்ஞான ஆய்வுகூடம்

amg fin (1)சிதம்பராக் கல்லூரி விஞ்ஞான ஆய்வுகூட வேலைகள் முழுமையாக பூர்த்தியடைந்துள்ளன.

கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக இயங்க முடியாமல் சிதைவுற்ற நிலையிலிருந்த வல்வை சிதம்பராக்கல்லூரி பௌதீகவியல் மற்றும் உயிரியல் ஆய்வுகூடங்களின் புனரமைப்பு வேலைகள் பூர்தியடைந்துள்ளது. வடமராட்சி வலயத்தில் வல்வெட்டித்துறை நகராட்சிமன்றத்திற்குட்பட்ட உயர்தரக் கல்லூரியான சிதம்பராக்கல்லூரி யாழ் மாவட்டத்திலேயே முன்னணித் தரத்திலான விஞ்ஞான ஆய்வுகூட வசதிகளை கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று சிதம்பராக்கல்லூரி நலன்விரும்பிகளின் பெரும் ஆதரவோடு சிதம்பராக்கல்லூரி நலன்புரிவோர் வலையமைப்பினுடாக (CWN )மீண்டும் அதே தரத்துடன் புத்துயிர் பெற்றுள்ளது. மிகக்குறுகிய காலத்திற்குள் ஆரம்பிக்கப்பட்ட இவ்வேலைத்திட்டங்கள் CWN வலையமைப்பினரின் மிகச்சிறந்த திட்டமிடுதலின் மூலம் மிகத்துரிதமாக நிறைவுபெற்றுள்ளது. 

பாடசாலை பழையமாணவர் சங்கம் - வல்வெட்டித்துறை - புதிய செயற்குழு

10-02-2013 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பழையமாணவர் சங்க பொதுக்கூட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட புதிய செயற்குழு.

தலைவர் : அதிபர் திரு. கி. இராஜதுரை (பதவிவழியாக)
உப தலைவர்: திரு. ந. இராஜேஸ்வரன்
திரு. சிவா. கிருஷ்ணமூர்த்தி
செயலாளர் : திரு. கோ. சற்குணபாலன்

வாழ்த்துச்செய்தி (சிதம்பரா கலைமாலை LONDON - 2012)

prince

இலண்டன் மாநகரில் சிதம்பராக்கல்லூரி நலன்புரிவோர் வலையமைப்பினரால் நடாத்தப்பட்ட கணிதத்திறனாய்வு போட்டியில் பங்குபற்றிய மாணவர்களையும், பரிசில் பெறவிருக்கும் மாணவர்களையும் பாராட்டி வாழ்த்துகின்றோம்.