ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகள்!

R.Sஎமது பாடசாலையின் கொழும்பு பழையமாணவர் சங்கத்தின் தலைவராக இருந்து  பாடசாலையின் அபிவிருத்திக்கு அயராது பாடுபட்டு உழைத்து, பாடசாலையின் புகழை அகிலமறியச்செய்து இறைவனடிசேர்ந்திருக்கும் திரு.R.S.சிவசுப்ரமணியம். அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கையாக்கின்றோம்.

புனரமைக்கப்படவேண்டியுள்ள சிதம்பராக்கல்லூரி ஆராதனை மண்டபமும் வகுப்பறைகளும்.

DSC 3221எமது பாடசாலையின் அடித்தளமாக விளங்கும் இந்த மாடிக்கட்டடம் புனரமைப்பினை வேண்டிநிற்கின்றது. வடமராட்சியின் சகல பாடசாலைகளினதும் இத்தகைய தாய்க்கட்டடங்கள் கம்பீரமாக காட்சியளிக்கையில் எமது பாடசாலையின் இந்த தாய்க்கட்டடமானது ஆராதனை மண்டபத்தையும் வகுப்பறைகளையும் கொண்டு சிதைந்த நிலையில் காணப்படுகின்றது.

சிதம்பராக்கல்லூரி நலன்புரி வலையமைப்பினரால் (CWN) நடாத்தப்பட்ட கணிதப்போட்டி - 2013

cwn(5)சிதம்பராக்கல்லூரி நலன்புரி வலையமைப்பினரால் (CWN) நேற்று கணிதப்போட்டி Mathematics Challenge 2013  பிரித்தானியாவில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. பெற்றோர்கள் மிகவும் ஆர்வத்துடன் தங்கள்  பிள்ளைகளை  இப்போட்டிக்கு தயார்படுத்தி இதற்கு மிகவும் ஆதரவளித்தனர். சென்ற ஆண்டு 280 மாணவர் பங்குபற்றிய  Mathematics Challenge இல் இந்த ஆண்டு 1300  மாணவர்கள் பங்குபற்றியது சிதம்பராக்கல்லூரிக்கு மிகவும் பெருமை தேடித்தந்துள்ளது.

சிதம்பராக்கல்லூரி பழைய மாணவர்கள் கல்லூரியை பார்வையிட வருகை தந்திருந்தனர்.

P P VISIT 2013 (23)உலகெங்கும் பரந்து வாழும் வல்வை மக்கள் ஒன்று திரண்டு வல்வை முத்துமாரி அம்மனை தரிசிக்க இங்கு வருகை தந்திருந்தனர். இச்சந்தர்ப்பத்தில் தாங்கள் கல்வி கற்ற சிதம்பராக்கல்லூரியை பார்வையிட பழைய மாணவர் தாய் சங்கம் ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தது. வட மாகாணத்தில் முதல் தரமாக அமைந்துள்ள விஞ்ஞான ஆய்வுகூடம் மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பௌதீக வளங்கள் கணணி வலையமைப்பு இணையதளம் மின்பிறப்பாக்கி அவற்றின் பயன்பாட்டை நேரடியாக பார்வையிட்டனர்.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள விஞ்ஞானஆய்வு கூடங்கள், கழிப்பறைகள் கொடையாளிகளால் மதிப்பீடு செய்யப்படுகின்றது.

P1060234குறுகிய காலப்பகுதியில் நிறைவேற்றபட்டுள்ள இந்த வேலைதிட்டங்களை நேரில் பார்வையிட சிதம்பராக்கல்லூரி பழைய மாணவர்களும் நலன்விரும்பிகளும் மிகவும் ஆர்வமாக உள்ளனர். இதற்குரிய ஒழுங்குகளை பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மிகவும் உற்சாகத்துடன் மேற்கொண்டு வருகின்றனர். இங்கு வருகை தந்த கொடையாளிகளுக்கு நடைபெற்ற வேலைகளுக்குரிய கணக்கு விபரங்களும் பற்றுசீட்டுகளும் முழுமையாக காண்பிக்கபடுகின்றது.

சிதம்பராக்கல்லூரி பழைய மாணவர்களின் மாபெரும் ஒன்றுகூடல்

get 1உலகெங்கும் பரந்து வாழும் வல்வை மக்கள் ஒன்று திரண்டு வல்வை முத்துமாரி அம்மனை தரிசிக்க இங்கு வருகை தந்துள்ளனர். இச்சந்தர்ப்பத்தில் தாங்கள் கல்வி கற்ற சிதம்பராக்கல்லூரியை பார்வையிட பழைய மாணவர் தாய் சங்கம் ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது. வட மாகாணத்தில் முதல் தரமாக அமைந்துள்ள விஞ்ஞான ஆய்வுகூடம் மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பௌதீக வளங்கள் கணணி வலையமைப்பு இணையதளம் மின்பிறப்பாக்கி அவற்றின் பயன்பாடு ஆகியவற்றை நேரடியாக பார்வையிடலாம்.

இடைநிறுத்தப்பட்ட புதிய ஆண்கள் கழிப்பறை அமைக்கும் வேலைகள் பழையமாணவர் சங்கத்தின் முயற்சியால் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

Boys (1)CWN ஆல் முன்னெடுக்கப்பட்ட சிதம்பராக்கல்லூரி புதிய கழிப்பறைகள் அமைக்கும் திட்டம் மாசிமாத ஆரம்பத்தில் முற்றாக நிறுத்தப்பட்டது. மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறை வேலைகள் இடைநிறுத்தப்பட்டதால் கல்லூரி நிர்வாகம் பெரும் நெருக்கடிக்குள்ளாவதை கருத்திற் கொண்டு, புதிய நிர்வாகசபை உறுப்பினர்கள் உடனடியாக இவ்வேலைத்திட்டத்தை பொறுப்பேற்று மேலதிக நிதியை திரட்டி வேலைகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை சிதம்பராக்கல்லூரி பழையமாணவர் சங்கத்தின் இரண்டாவது மாதாந்த நிர்வாகசபை கூட்ட அறிக்கை [24-03-2013]

24-03-2013சிதம்பராக்கல்லூரியின் பழையமாணவர் தாய்ச்சங்கத்தின் இரண்டாவது மாதாந்த நிர்வாகசபைக் கூட்டமானது 24-03-2013 மாலை 5 மணியளவில் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. மேற்படி கூட்டத்தில் கல்லூரியின் அபிவிருத்தி மற்றும் பிறவிடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு மிகமுக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்தவகையில் முதலாவது மாதாந்த நிர்வாகசபைக்கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் மற்றும் மிக அத்தியாவசியமான செலவுகள் தொடர்பாக கொழும்பு பழையமாணவர் சங்கத்திடம் கேட்டுக்கொண்ட சிலவிடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.