வடமராட்சி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்டச்சுற்றுத்தொடரில் இன்று நடைபெற்ற போட்டிகளில் 14 ஆம் மற்றும் 16 வயதுப்பிரிவுகள் வெற்றிபெற்றது.

வடமராட்சி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்டச்சுற்றுத்தொடரில் இன்று(06-11-2013) நடைபெற்ற  16 வயதுப்பிரிவிற்கான  சுற்றுப்போட்டி இமையாணன் இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. இதில் எமது கல்லூரி பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியுடன் மோதியதில், 1:0 என்ற கோல் கணக்கில் ஹாட்லிக் கல்லூரியை வென்றது.

பழையமாணவர் சங்கம் வெளியிட்டுள்ள கணக்கறிக்கை [10/02/2013 - 31/07/2013]

ppa vvt ac 2013 1கணக்காய்வு செய்யபட்ட கணக்கறிக்கை மாதாந்த நிர்வாகசபை கூட்டத்தில், சமர்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. 10.02.2013 இல் தாம் பொறுப்பேற்றது முதல் 31.07.2013 வரையான வரவு செலவு விபரங்கள் உள்ளடக்கபட்டு வெளியிடப்பட்டுள்ள முதலாவது கணக்கறிக்கை.

கல்விஅமைச்சு மற்றும் சுகாதார அமைச்சும் இணைந்துநடாத்திய வடமராட்சி வலய தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் சுகாதார மருத்துவக்கண்காட்சி

2013-10-23 10.30.47கல்விஅமைச்சு மற்றும் சுகாதார அமைச்சும் இணைந்து நடாத்திய வடமராட்சி வலய தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் சுகாதார மருத்துவக்கண்காட்சி பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரியில் 23-10-2013 அன்று நடைபெற்றது. எமது கல்லூரி மாணவர்களின் உருவாக்கப்பட்ட ஆக்கங்களும் இதில் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும் இக்கண்காட்சி நிகழ்வின் நிறைவாக இடம்பெற்ற கலாச்சார நிகழ்வில் எமது கல்லூரி மாணவர்களால் ஆற்றுகை செய்யப்பட்ட நாடகம் இரண்டாம் இடத்தைப்பெற்றுக்கொண்டது.

சிதம்பராக்கல்லூரி அதிபரின் வீட்டிற்கு முறையின்றி சென்ற பழையமாணவர்கள் [வல்வெட்டித்துறை பழையமாணவர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை]

1.9.2013 ம் திகதி நடைபெறவிருந்த பொருளாளர் தெரிவிற்கான விசேட பொதுக்கூட்டம் பிற்போடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாவலடியில் வசிக்கும் அதிபரின் வீட்டிற்கு சுமார் 15 பழையமாணவர்கள் கூட்டமாக சென்றனர். கூட்டம் பிற்போடப்பட்டதற்கான காரணத்தை மரியாதையின்றி கூச்சல் போட்டுக்கேட்டனர். இந்தியாவிலிருந்து வருகைதந்திருந்த தியாகராஜா முரளிதரன் என்பவர்

விசேட பொதுக்கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது.

01-09-2013 நடைபெறவிருந்த கல்லூரி பழையமாணவர் சங்க விசேட பொதுக்கூட்டமானது பிற்போடப்பட்டுள்ளது. மாகாணசபை தேர்தலின் பின்னர் நடைபெறும். திகதி பின்னர் அறிவிக்கப்படும்.

செயலாளர்
சிதம்பராக்கல்லூரி பழையமாணவர் சங்கம்
வல்வெட்டித்துறை

சிதம்பராக்கல்லூரி ஆராதனை மண்டபத்தை புனரமைக்க Children's Well-wishers Network (CWN) முன்வந்துள்ளது.

DSC 3220பல தசாப்த காலமாக சிதைந்திருந்த கல்லூரியின் பிரதான மாடி கட்டிடத்தை புனரமைத்து தருமாறு பாடசாலை சமூகத்தினால் பல முறை கோரிக்கை விடப்பட்டது. விஞ்ஞான ஆய்வு கூடங்கள் மற்றும் புதிய கழிப்பறைகளை மிகவும் குறுகிய காலபகுதியில் நிர்மாணித்த CWN, இவ்வேலைத்திட்டத்தை சிதம்பராக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினூடாக நிறைவேற்றும் என்று சுவாமி ராஜேந்திரா மாஸ்டர் அறிவித்துள்ளார். விஞ்ஞான கருத்தரங்குகள் நடத்தக் கூடிய தொழில்நுட்ப வசதிகளுடன் கற்றோடமுள்ள ஆராதனை மண்டபமாக இது திருத்தியமைக்கப்படவுள்ளது. லண்டனில் இருந்து Multimedia Projector and Mounting kit ஏற்கனவே தருவிக்கபட்டுள்ளது.