வடமராட்சி கல்வி வலயத்தினரால் நடாத்தப்பட்ட வர்ண இரவு நிகழ்வில் எமது கல்லூரிமாணவிகள் கௌரவிக்கப்பட்டனர்.

colors Nightவடமராட்சி கல்வி வலயத்தினரால் 2015.12.02 புதன்கிழமை ஒழுங்கு செய்யப்பட்டிருந்த வர்ண இரவு நிகழ்வில் எமது கல்லூரியில் இருந்து தேசிய மட்ட பழுத்தூக்கல் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்த மாணவிகளான செல்விகள் இராமகிருஷ்ணன் தசாந்தினி,  கோகுலதாஸ் யோகேஸ்வரி ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். இவர்கள் மேலும் சாதனைகள் புரிந்து கல்லூரித் தாய்க்குப் புகழ் சேர்க்க கல்லூரிச்சமூகம் இவர்களை வாழ்த்துகின்றது.

சிதம்பரக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் (International) அங்குரார்ப்பணம்.

LOGO-osa-intபாரம்பரியமும் பெருமையும் மிக்க வல்வை சிதம்பரக்கல்லூரியின் கல்வி வளர்ச்சி கருதியும், கணித விஞ்ஞான துறைகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரித்து அடைவு மட்டத்தை உயர்த்தும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டும், கல்வி மற்றும் பௌதீகவள தேவைகளை பாடசாலையுடன் நேரடித்தொடர்புகளை ஏற்படுத்தி சிதம்பரக் கல்லூரியை கல்வித்தரத்தில் ஒரு உன்னத இடத்திற்கு இட்டுச்செல்லும் நோக்கில் உலகெங்கும் பரந்து வாழும் வல்வை மக்களின் கோரிக்கைக்கிணங்க புலம்பெயர் சிதம்பரக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் பழைய மாணவர் மற்றும் நன்கொடையாளர்களால் இலண்டனில்(07.11.15) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

நிறுவுநர் தினமும் பரிசளிப்பு விழாவும் -2015

Prize-day-2015சிதம்பராக் கல்லூரி வருடாந்த பரிசில் வழங்கும் வைபவம் மற்றும் நிறுவனர் தினமும் இன்று 2015.11.11 அன்று பிற்பகல் 1.30 மணியளவில் கல்லூரி மண்டபத்தில் கல்லூரியின் அதிபர் திரு.S.குருகுலலிங்கம் அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது. பிரதம விருந்தினராக வடக்குமாகாண கல்விப் பணிப்பாளர் திரு.செ.உதயகுமார் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.சிறப்பு விருந்தினராக வடமராட்சிக் கல்வி வலயக் கணக்காளர் திருமதி மே.மோகனச்செல்வன் அவர்கள் கல்நது கொண்டு சிறப்பித்திருந்தார்.

புலமைப் பரிசில் பரீட்சையில் 181 புள்ளிகளைப் பெற்ற எமது கல்லூரி மாணவன் சண்முகதாஸ் கீர்த்தி பிரதேச செயலகத்தினால் பாராட்டி வாழ்த்துமடல் வழங்கப்பட்டது.

gkeerthy-grade-52015 ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 181 புள்ளிகளைப் பெற்ற எமது கல்லூரி மாணவன் செல்வன் சண்முகதாஸ் கீர்த்தி அதியுயர் சித்திபெற்றமைக்காக வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தினால் கெளரவிக்கப்பட்டடார்.

Yarl Geek Challenge போட்டியில் எமது கல்லூரி முதலாமிடத்தை பெற்றுக்கொண்டது.

Yarl Geek Challenge-2015கணினி சார் இலாபநோக்கற்ற நிறுவனம் Yarl IT Hub, மாகாண கல்வித் திணைக்களத்துடன் இணைந்து தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப பாடத்தை கற்கும் பாடசாலை மாணவர்களுக்காக நான்காவது வருடமாக கணினி சார் புத்தாக்கதிறன் ஊக்குவிப்பு போட்டியை நடாத்துகிறது. வலய மட்ட போட்டிகள் இன்று(09-10-2015) நடைபெற்றன். வடமராட்சி வலயத்தில் முதலாமிடத்தை எமது கல்லூரி க.பொ.த (சா.த) மாணவர் அணி பெற்றுக் கொண்டது.

புலமைப் பரிசில் பரீட்சையில் 181 புள்ளிகளைப் பெற்று எமது கல்லூரிக்குப் பெருமை சேர்த்த செல்வன் சண்முகதாஸ் கீர்த்தி எமது ஆசிரியர்களால் கொளரவிக்கப்பட்டார்

Grade 5 2புலமைப் பரிசில் பரீட்சையில் 181 புள்ளிகளைப் பெற்று எமது கல்லூரிக்குப் பெருமை சேர்த்த செல்வன் சண்முகதாஸ் கீர்த்தி எமது ஆசிரியர்களால் கொளரவிக்கப்பட்டார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் எமது கல்லூரிமாணவன் 181 புள்ளிகளுடன் சித்தி

examLogText2015 தரம் 5 இற்கான புலமைப்பரிசில் எமது கல்லூரி மாணவன் சண்முகதாஸ் கீர்த்தி 181 புள்ளிகள் பெற்று சித்தி அடைந்துள்ளார்.

குறித்த மாணவன் தினக்குரல் பத்திரிகையால் நடாத்தப்பட்ட முன்னோடி புலமை பரிசில் பரீட்சையில் மிகச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசியமட்டரீதியில் நடைபெற்ற பளுதூக்கல் போட்டியில் வெற்றிபெற்ற எமது கல்லூரி வீராங்கனைகள் மூவரும் இன்று கெளரவிக்கப்பட்டனர்.

nat-met-2015-1தேசியமட்டரீதியில் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற  பளுதூக்கல் போட்டியில் வெற்றி பெற்ற எமது கல்லூரி வீராங்கனைகள் மூவரும் இன்று(25-09-2015) பாடசாலைசமூகத்தினால் கெளரவிக்கப்பட்டனர். அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற பளுதூக்கல் போட்டியில்(2015)

தேசியமட்ட பளுதூக்கல் போட்டியில்(2015) எமது கல்லுரி மாணவர்கள் 3ம் மற்றும் 4ம் இடங்களைப்பெற்றனர்.

nat-met-2015அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற பளுதூக்கல் போட்டியில்(2015) செல்வி தசாந்தினி இராமகிருஷ்ணன், செல்வி கோ.ஜோகேஸ்வரி 3 ஆம் இடத்தையும்,  மற்றும் செல்வி அ.சிந்து 4 ஆம் இடத்தையும் பெற்றனர்.

வடமாகாண பழுதூக்கல் போட்டியில் 3 மாணவர்கள் தங்கப்பதக்கங்களைப் வென்றுள்ளனர்.

chithambara-college-students-get-3-gold-medals-1வடமாகாண பளுதூக்கல் போட்டியில் பெண்கள் பிரிவில் எமது கல்லூரியைச் சேர்ந்த மூன்று மாணவிகள் தங்கப்பதக்கங்களைப் வென்றுள்ளனர். இந்தப் போட்டிகள்  யாழ் இந்துக் கல்லூரியில் உள்ள விளையாட்டரங்கில் இடம்பெற்றன(July/2015). இதில்