வருடாந்த பரிசளிப்பு விழாவுக்கு தயாராகும் வல்வை சிதம்பராக்கல்லூரி சமூகம்.

Auditoriumசிதம்பராக்கல்லூரி வருடாந்த பரிசளிப்பு விழா 2017 நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணியளவில் கல்லூரி மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. வகுப்பு ரீதியாக முதன்நிலை பெற்ற மாணவர்கள், மாகாண மற்றும் மாவட்ட போட்டி நிகழ்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், பல்கலை கழகங்களுக்கு தெரிவானவர்கள் அனைவருக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படவுள்ளனர்.

 

கல்லூரி அதிபர் திரு குருகுலலிங்கம் தலைமையில் நடைபெறவிருக்கும் இவ்விழாவில் பிரதம விருந்தினராக கௌரவ கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

 

Auditorium