கல்லூரியில் நிறுவனர் தினமும் பரிசளிப்பு விழாவும் இன்று இடம்பெற்றது

கல்லூரியின் நிறுவனர் தினமும், பரிசளிப்பு விழாவும் இன்று(11.11.2016) நடைபெற்றது. நிகழ்வுகள் பாடசாலை அதிபர் திரு.குருகுலலிங்கம் தலைமையில் ஆரம்பமானது.

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திருமதி தவமலர் சுரேந்திரநாதன் (பழைய மாணவர்) அவர்களும்,

கௌரவ விருந்தினராக திரு.வ .கந்தசாமி (பழைய மாணவர் ஒய்வு நிலை மாவட்ட நன்னடத்தை உத்தியோகத்தர்) அவர்களும், சிறப்பு விருந்தினராக் திரு.மா.நவநீதமணி (கோட்டக் கல்விப் பணிப்பாளர், கோட்டக் கல்வி அலுவலகம், பருத்தித்துறை) அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்கள் .

நிகழ்வில் பரிசளிப்பவைத் தொடர்ந்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றது. நிகழ்வில் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் பலர் கலந்து கொண்டு நிகழ்வினைச் சிறப்பித்திருந்தனர்.