கல்லூரி பழைய மாணவர்களினால் மேற்கொள்ளப்பட்ட சிரமதான நிகழ்வு

valvettithurai-chithambara-college-4கல்லூரியின் பழைய மாணவர்கள் சிலரினால் கல்லூரியில் சிரமதான மற்றும் கல்லூரியின் முகப்பு பெயர் பலகைக்கு வர்ணம் பூசி அழகுபடுத்தல் வேலைகள் என்பன மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துருப்பிடித்து வர்ணம் மங்கிய நிலையில் காணப்பட்ட கல்லூரியின் முகப்பு பெயர் பலகை வர்ணம் பூசி அழகுபடுத்தப்பட்டு தற்போது புதுப்பொலிவுடன் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் கற்கள் கொட்டப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு இடையூறாக காணப்பட்ட கல்லூரியின் நுழைவாயிலை அண்டிய

முற்றம் முழுவதுமாக கற்கள் அரித்தெடுக்கப்பட்டு கற்கள் அகற்றப்பட்டுள்ளன.

சுமார் 5 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட சிரமதான நிகழ்வில், உழவு இயந்திரம் கொண்டு முற்றம் ½ அடி ஆழத்திற்கு மேல் தோண்டப்பட்டதோடு அங்கிருந்த கற்கள் அரித்தெடுக்கப்பட்டுள்ளது. அரித்தெடுக்கப்பட்ட சுமார் 5 உழவு இயந்திர பெட்டி அளவுகள் கொண்ட கற்கள் பாடசாலையிலிருந்து அகற்றப்பட்டு, அரிக்கப்பட்ட மண்ணானது சீரான முறையில் பரப்பி முற்றம் அழகு படுத்தப்பட்டுள்ளது.

February -2016