வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி-2016

Sports 2014 12கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி பாடசாலையின் அதிபர் சி .குருகுலலிங்கம் தலைமை நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திரு ச.ஸ்ரீராமச்சந்திரன் ( கோட்டக்கல்வி அலுவலர் பருத்தித்துறை கோட்டம் ) அவர்களும், சிறப்புவிருந்தினராக திரு.R இராஜசீலன் (ஆசிரியர் ஆலோசகர், உடற்கல்வி வடமராட்சி வலயம் ) அவர்களும்,
கௌரவ விருந்தினர்களாக திரு.ச.க.தேவசிகாமணி (பழைய மாணவர் ,சிறந்த விளையாட்டு வீரர் ), திரு.N . தங்கவேல் (பழைய மாணவர் ,சிறந்த விளையாட்டு வீரர்) வல்வெட்டித்துறையின் பிரமுகர்கள் மற்றும் பெற்றோர்கள் பலரும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

பளுதூக்கல் போட்டியில்

(All Island School Games 2015) வல்வெட்டித்துறை சிதம்பரக் கல்லூரி மாணவிகள் மூவர்களான செல்வி தசாந்தினி இராமகிருஷ்ணன், செல்வி கோ.ஜோகேஸ்வரி,செல்வி அ.சிந்து ஆகியோருக்கு பதக்கமும் அணிவிக்கப்பட்டது

முதலாம் இடத்தை சிவப்பு இல்லமும், இரண்டாம் இடத்தை பச்சை இல்லமும், மூன்றாம் இடத்தை நீலம் இல்லமும் பெற்றுக்கொண்டது.