சிதம்பரக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் (International) அங்குரார்ப்பணம்.

LOGO-osa-intபாரம்பரியமும் பெருமையும் மிக்க வல்வை சிதம்பரக்கல்லூரியின் கல்வி வளர்ச்சி கருதியும், கணித விஞ்ஞான துறைகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரித்து அடைவு மட்டத்தை உயர்த்தும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டும், கல்வி மற்றும் பௌதீகவள தேவைகளை பாடசாலையுடன் நேரடித்தொடர்புகளை ஏற்படுத்தி சிதம்பரக் கல்லூரியை கல்வித்தரத்தில் ஒரு உன்னத இடத்திற்கு இட்டுச்செல்லும் நோக்கில் உலகெங்கும் பரந்து வாழும் வல்வை மக்களின் கோரிக்கைக்கிணங்க புலம்பெயர் சிதம்பரக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் பழைய மாணவர் மற்றும் நன்கொடையாளர்களால் இலண்டனில்(07.11.15) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

தெரிவு செய்யப்பட்ட நிர்வாகசபை உறுப்பினர்கள் விபரம்:

காப்பாளர்: திரு. S . குருகுலலிங்கம் (அதிபர்)

தலைவர் : திரு. R . பிரேம்நாத்

செயலாளர், அதிகாரபூர்வ பேச்சாளர் : திரு. M . ராமானந்

பொருளாளர் : திரு. M ரமேஷ்

 

செயற்குழு உறுப்பினர்கள்:

திரு. S. ராஜசங்கர் ( உப அதிபர்)

திரு. N. ரஞ்சித் (கொழும்பு)

திரு. A. ராஜமோகன் (இந்தியா)

திரு. A. மதிவதனன்

திரு. Y. சசிகுமார்

திரு. S. யோகேந்திரா (கனடா)

திரு. A. மதியழகன்

திரு. K . சுகுமாரன்

 

இலண்டன் நேரப்படி 17:30 மணியளவில் ஆரம்பிக்கபட்ட இந்நிகழ்வில் ஏக மனதாக ஏற்றுகொள்ளபட்ட யாப்பு (அமைப்பு விதிகள்) இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

 

சிதம்பரக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் (International) அமைப்பு விதிகள் (யாப்பு)


01. பெயர்:- இச் சங்கம் "சிதம்பரக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் (International)” என அழைக்கப்படும்.


02. நோக்கம் :-


(அ ) கல்லூரியின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் கல்லூரி நிர்வாகத்துடன் இணைந்து தொழிற்படல்.


(ஆ) கணித விஞ்ஞான உயர்தர மாணவர்களை உருவாக்கி ஊக்குவிப்பது.


(இ) கணித விஞ்ஞான உயர்தர மாணவர்களின் அடிப்படை கற்றல் தேவைகளை நிவர்த்தி செய்வது.


03. உறுப்புரிமை :- கல்லூரியில் கல்வி கற்ற எல்லா பழைய மாணவர்களும், ஆசிரியர்களும் மற்றும் சிதம்பரக்கல்லூரி நன்கொடையாளிகளும் உறுப்பினராவதற்கு உரித்துடையவராவர்.


04. சந்தாப்பணம் :- £25.00


05. சாதாரண உறுப்பினர் :-


ஒவ்வொரு வருட ஆரம்பத்திலும் சந்தாப்பணமாக £25.00 செலுத்தி சாதாரண உறுப்பினராக சேர்ந்து கொள்ளலாம். அடுத்துவரும் வருடங்களில் மார்கழி 31 ஆம் திகதிக்கு முன் சந்தாப்பணத்தை கட்டத்தவறின் நிர்வாகசபை தீர்மானிக்கும் பட்சத்தில் உறுப்பினர் தனது உறுப்புரிமையை இழந்தவராகக் கருதப்படுவர்.


06. காப்பாளர் :- அதிபர்


07. சங்கத்தின் நிர்வாக அங்கத்தவர்களும் செயற்பாடுகளும்:-


(அ) வருடாந்த பொதுக்கூட்டத்தில் பங்குபற்றும் அங்கத்தவர்களிடையே இருந்து பின்வரும் நிர்வாக அங்கத்தவர்கள் தெரிவுசெயப்படுவர்.


1. தலைவர்


2. செயலாளர்


3. அதிகாரபூர்வ பேச்சாளர்.


4. பொருளாளர்


5. எட்டு செயற்குழு அங்கத்தவர்கள்.


(ஆ) நிர்வாகசபை குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூடும். கூட்டத்திற்கு ஏழு நாட்களுக்கு முன்னறிவித்தல் கொடுக்கப்படவேண்டும்.


(இ) நிர்வாகசபை கூட்டங்களுக்கு தொடர்ந்து 2 முறை சமூகமளிக்காத அங்கத்தவர் தாமாகவே பதவி விலகியதாக கணிக்கப்பட்டு அவ் வெற்றிடம் நிர்வாக சபையால் நிரப்பப்படும்.


08. வருடாந்த பொதுக்கூட்டம் :-


ஒவோரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் கூட்டப்படல் வேண்டும். கூட்டத்திற்கு பத்து நாட்கள் முன் அறிவித்தல் கொடுக்கப்பட வேண்டும்,


09. ஆண்டுப்பொதுக்கூட்ட நடைமுறைகள்:-


பின்வரும் நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படும்.


(அ) செயலாளரால் சமர்ப்பிக்கப்பட்ட ஆண்டறிக்கையை ஏற்று உறுதிப்படுத்தல்.


(ஆ) பொருளாளரால் சமர்ப்பிக்கப்பட்ட ஆண்டுக் கணக்குகளைப் பரீசீலனை செய்து ஏற்றுக்கொள்ளுதல்.


(இ) நிர்வாகசபை அங்கத்தவர்களைத் தெரிவுசெய்தல்


(ஈ) வேறுவிடயங்கள் ஏதும் இருப்பின் அவற்றை ஆராய்தல், ஏற்றுக் கொள்ளுதல் அல்லது நிராகரித்தல்.


10. தீர்மானங்கள் நிறைவேற்றுதல்:-


(அ) வருடாந்த பொதுக்கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களிற்கு சாதாரண பெரும்பான்மை போதுமானது.


(ஆ) நிர்வாகசபையில் எடுக்கப்படும் தீர்மானங்களிற்கு சாதாரண பெரும்பான்மை போதுமானது..


11. செயலாளர் கடமைகள்:-


செயலாளர் சங்கத்தின் வருடாந்த, விசேட, நிர்வாக சபை கூட்டங்களை கூட்டுவதுடன், அக்கூட்டங்களின் நிகழ்ச்சிக்குறிப்புக்களை பேணுவதற்கும், சகல மின்னஞ்சல் தொடர்புகளை கவனிப்பதற்கும,; நிர்வாகசபையில் ஏற்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கும், அவ்வப்போது சங்கத்தால் அவருக்கு பொறுப்பளிக்கப்படும் அலுவல்களைக் கவனிப்பதற்கும் பொறுப்பாக இருப்பார்.


12. பொருளாளர் கடமைகள்:-


(அ) பொருளாளர் சங்கத்தின் உறுப்பினர்களின் பெயர்களையும் தற்காலிக, நிரந்தர முகவரிகளையும் விபரங்கள் யாவும் அடங்கிய பதிவேடு ஒன்றைப் பேணுவதுடன் சங்கத்தின் வரவு செலவு அடங்கிய காசேடு ஒன்றையும் பேணவேண்டும்.


(ஆ) பெறப்படும் பணத்திற்கான மின்னஞ்சல் பற்றுச்சீட்டுக்கள் அனுப்புவது


(ஆ) சகல கொடுப்பனவுகளும் பற்றுச்சீட்டுடன் இருக்கவேண்டும்.


(இ) பொருளாளர் ஒவ்வொரு நிர்வாகசபைக் கூட்டத்திலும் மாதாந்த வரவு செலவுக்கணக்கை சமர்ப்பிக்கவேண்டும்.


13.அதிகாரபூர்வ பேச்சாளர்


சங்கத்தின் சகல மக்கள் மற்றும் ஊடக தொடர்புகளை பேணுவதற்கு அதிகாரமுடையவர்.


14. Website – www.chithambaracollege.com


15. Email – This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.


15. அமைப்பு விதிகளில் மாற்றம்:-


பொதுக்கூட்டமொன்றில் நிகழ்ச்சிநிரல் சேர்க்கப்பட்டு அக்கூட்டத்தில் சமூகமளித்தோரால் மூன்றில் இரண்டு (2/3) பங்கினர் சாதகமாக வாக்களிக்காவிடின் அமைப்பு விதிகளில் மாற்றமோ, திருத்தமோ செய்ய இயலாது.

 

குறிப்பு:- சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு 07.11.2015 சனிக்கிழமை நடைபெற்றபோது அமைப்பு விதிகள் ஆராயப்பட்டு ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.