நிறுவுநர் தினமும் பரிசளிப்பு விழாவும் -2015

Prize-day-2015சிதம்பராக் கல்லூரி வருடாந்த பரிசில் வழங்கும் வைபவம் மற்றும் நிறுவனர் தினமும் இன்று 2015.11.11 அன்று பிற்பகல் 1.30 மணியளவில் கல்லூரி மண்டபத்தில் கல்லூரியின் அதிபர் திரு.S.குருகுலலிங்கம் அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது. பிரதம விருந்தினராக வடக்குமாகாண கல்விப் பணிப்பாளர் திரு.செ.உதயகுமார் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.சிறப்பு விருந்தினராக வடமராட்சிக் கல்வி வலயக் கணக்காளர் திருமதி மே.மோகனச்செல்வன் அவர்கள் கல்நது கொண்டு சிறப்பித்திருந்தார்.

 

ஆரம்பக் கல்வி மாணவர்களுக்கான பரிசில்களைக் கணக்காளரும் ஏனைய பரிசில்களைப் பிரதம விருந்தினரும் வழங்கிக் கௌரவித்தனர்.

இந்நிகழ்வில் 2013,2014 காலப்பகுதியில் பாடசாலைப் பொளதிகவள அபிவிருத்திக்கு பங்களிப்பினை செய்த Children's Well-wishers Network (CWN-UK), VALVAI73 மற்றும் நன்கொடையாளிகள் கௌரவிக்கப்பட்டனர். மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

2013,2014 காலப்பகுதியினில் Children's Well-wishers Network (CWN-UK) அமைப்பினரால் ஆராதனை மண்டபமும் பெளதிகவியல், இரசாயனவியல் மற்றும் உயிரியல் ஆய்வு கூடங்களும், மலசலகூடங்கள் புனரமைப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.