புலமைப் பரிசில் பரீட்சையில் 181 புள்ளிகளைப் பெற்ற எமது கல்லூரி மாணவன் சண்முகதாஸ் கீர்த்தி பிரதேச செயலகத்தினால் பாராட்டி வாழ்த்துமடல் வழங்கப்பட்டது.

2015 ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 181 புள்ளிகளைப் பெற்ற எமது கல்லூரி மாணவன் செல்வன் சண்முகதாஸ் கீர்த்தி அதியுயர் சித்திபெற்றமைக்காக வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தினால் கெளரவிக்கப்பட்டடார். 23-10-2015 ஆம் திகதி வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தினால்'சர்வதேச சிறுவர் முதியோர் மாற்றாற்றல் உடையோர் தினவிழாவை 2015 முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வுகளின் போதே இந்த நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வுகள் காலை 9.30 மணியளவில் பருத்தித்துறை பர்வத வர்தனி கலாமன்ற மண்டபத்தில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் திரு.ஜெயசீலன் தலைமையில் இடம்பெற்றது.

gkeerthy-grade-5