தேசியமட்டரீதியில் நடைபெற்ற பளுதூக்கல் போட்டியில் வெற்றிபெற்ற எமது கல்லூரி வீராங்கனைகள் மூவரும் இன்று கெளரவிக்கப்பட்டனர்.

தேசியமட்டரீதியில் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற  பளுதூக்கல் போட்டியில் வெற்றி பெற்ற எமது கல்லூரி வீராங்கனைகள் மூவரும் இன்று(25-09-2015) பாடசாலைசமூகத்தினால் கெளரவிக்கப்பட்டனர். அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற பளுதூக்கல் போட்டியில்(2015)செல்வி தசாந்தினி இராமகிருஷ்ணன், செல்வி கோ.ஜோகேஸ்வரி 3 ஆம் இடத்தையும்,  மற்றும் செல்வி அ.சிந்து 4 ஆம் இடத்தையும் பெற்றிருந்தனர். பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் 3 வீராங்கனைகளும், கல்லூரியை அண்மித்து அமைந்துள்ள சுந்தரப் பெருமாள் கோயிலில் இருந்து மாலை அணிவித்து, பாண்ட் வாத்தியம் சகிதம் அழைத்து வரப்பட்டு கல்லூரி மண்டபத்தில், பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

nat-met-2015-1