தேசியமட்ட பளுதூக்கல் போட்டியில்(2015) எமது கல்லுரி மாணவர்கள் 3ம் மற்றும் 4ம் இடங்களைப்பெற்றனர்.

அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற பளுதூக்கல் போட்டியில்(2015) செல்வி தசாந்தினி இராமகிருஷ்ணன், செல்வி கோ.ஜோகேஸ்வரி 3 ஆம் இடத்தையும்,  மற்றும் செல்வி அ.சிந்து 4 ஆம் இடத்தையும் பெற்றனர். போட்டி 21-09-2015 மாலை பொலநறுவை றோயல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் சுமார் 80 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.  இப்போட்டியில் செல்வி தசாந்தினி இராமகிருஷ்ணன் 69KG போட்டியில் பங்கு கொண்டு 80KG பாரத்தை தூக்கி 3 ஆம் இடத்தையும், செல்வி கோ.ஜோகேஸ்வரி  58KG போட்டியில் பங்கு கொண்டு 70KG பாரத்தை தூக்கி 3 ஆம் இடத்தையும், செல்வி அ.சிந்து 62KG  போட்டியில் பங்கு கொண்டு 58KG பாரத்தை தூக்கி 4 ஆம் இடத்தையும் பெற்றிருந்தனர்.

nat-met-2015