இல்லமெய்வன்மை போட்டி-2015

Sports 2014 19கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி பாடசாலையின் அதிபர் கி.இராஜதுரை தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கப்டன் சின்னத்துரை சிவநேசன் ( யா/சிதம்பரக் கல்லூரி பழைய மாணவர் ) அவர்கள் கலந்து சிறப்பித்தார். பி.ப 1.30 மணியளவில் ஆரம்பமாகிய நிகழ்வில் பாடசாலை அதிபர் மற்றும் விருந்தினர்கள் ஊரிக்காடு ஸ்ரீ சுந்தரப் பெருமாள் ஆலயத்திலிருந்து பாடசாலை பாண்ட் வாத்தியத்துடன் கல்லூரி மைதானத்திற்கு அழைத்துவரப்பட்டனர். மங்கள விளக்கேற்றல், கொடியேற்றல், தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் பாடசாலைக் கீதத்துடன் போட்டிகள் ஆரம்பமாகியது.இவ் விளையாட்டுப்போட்டியில் இல்லங்களின் ஆண்கள், பெண்களுக்கான அணிநடை, மைதான நிகழ்வான குண்டெறிதல், தட்டெறிதல் என்பனவும், சுவட்டு நிகழ்வுகளான ஓட்டம், தடைஓட்டம், இல்ல அஞ்சலோட்டம், சிறுவர்கள் விளையாட்டு மற்றும் இல்லங்களுக்கிடையிலான கயிறு இழுத்தல் போன்ற பல போட்டிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றன.

மேலும் மேல்பிரிவு மாணவிகளின் இசையும் அசைவும் சிறப்பாக நடைபெற்றது. அத்துடன் பழைய மாணவர்களுக்கான போட்டிகளும் நடைபெற்றன.