நிறுவுநர் தினமும் பரிசளிப்பு விழாவும் -2014

ccpg 2013 (26)சிதம்பராக் கல்லூரி வருடாந்த பரிசில் வழங்கும் வைபவம் மற்றும் நிறுவனர் தினமும் இன்று(15-11-2014) மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. கல்லூரி அதிபர் திரு.கி.இராசதுரை அவர்கள் தலமையில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு,

வடமராட்சி வலய கல்வி பணிப்பாளர் திரு.சி.நந்தகுமார் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்திருந்தார்.

இந்நிகழ்வில்,கடந்த வருடம் Children's Well-wishers Network (CWN-UK) அமைப்பினரால் புனரமைப்பு செய்யப்பட்ட ஆராதனை மண்டபமும் பெளதிகவியல், இரசாயனவியல் மற்றும் உயிரியல் ஆய்வு கூடங்களும் திறந்துவைக்கப்பட்டன.

இவ்விழாவிற்கு எமது கல்லூரி பழையமாணவர் சங்கம் அனுசரணையினை வழங்கியிருந்தது.