சிதம்பராக்கல்லூரி கல்விக்கண்காட்சி-2014

எமது கல்லூரியின் கல்வி கண்காட்சி இன்று(17-07-2014) காலை 9 மணிமுதல் ஆரம்பமாகியது. இக் கண்காட்சியில் தரம் 6 ஆம் வகுப்பு தொடக்கம் உயர்தர வகுப்பு வரையான மாணவர்களின் செயற்பாடுகள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது.
இக்கண்காட்சியில் கடந்த வருடம் புதிதாக அமைக்கப்பட்ட இரசாயனவியல், பெளதீகவியல் மற்றும் உயிரியல் ஆய்வுகூடங்களிலும் மாணவர்களின் ஆக்கங்கள் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. பிற்பகல் 3 மணிவரை நீடித்திருந்த இந்த கண்காட்சியைப் பார்ப்பதற்கு அயல் பாடசாலைகளின் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஏராளமானோர் கண்டுகளித்தனர்.