கோட்டமட்ட தமிழ்மொழி தினப்போட்டிகளில் சிதம்பராக்கல்லூரி முதலாம் மற்றும் இரண்டாம் இடங்கள்.

பருத்தித்துறை கோட்ட பாடசாலைகளிற்கு இடையிலான அகில இலங்கை தமிழ்மொழி தினப்போட்டிகள் 19/04/2014 நடைபெற்றது. தமிழறிவு வினாவிடை இறுதிப்போட்டியானது வட இந்து மகளிர் கல்லூரிக்கும் யா/சிதம்பராக்கல்லூரிக்கும் இடையில் நடைபெற்றது. இப்போட்டியில் வட இந்து மகளிர் கல்லூரி அணி வெற்றியீட்டியது. யா/சிதம்பராக்கல்லூரி பட்டிமன்ற அணி இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டது.  அதனை தொடர்ந்து நடைபெற்ற பட்டிமன்ற இறுதிப்போட்டியும் வட இந்து மகளிர் கல்லூரி யா/சிதம்பராக்கல்லூரி அணிகளிற்கிடையிலேயே நடைபெற்றது. அப்போட்டியில் யா/சிதம்பராக்கல்லூரி பட்டிமன்ற அணி முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டது.

cctld2014