வலய கல்விப்பணிப்பாளரின் கருத்துரையுடன் பழையமாணவர் சங்கப்பொதுக்கூட்டம் சிறப்பான முறையில் நடைபெற்றது

1வருடாந்த பொதுக்கூட்டம் 14.02.2014 இல் இடம்பெற்றது. Children's Well-wishers Network (CWN) ஆல் புனரமைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஆராதனை மண்டபத்தில் நடைபெற்ற இப்பொதுக்கூட்டத்தில் எல்லோரும் ஒன்றிணைந்து சிதம்பராக்கல்லூரியை கட்டியெழுப்ப வேண்டுமென்பதே பெரும்பாலான பழையைமாணவர்களது கருத்தாக இருந்தது.

 அன்றைய தினம் ஆண்டறிக்கை கணக்கறிக்கை என்பன சபையில் சமர்ப்பிக்கப்பட்டு பிரேரணைகளும் பரிசீலிக்கப்பட்டன. தொடர்ந்து புதியநிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டது. தலைவராக திரு. சா. சிறீபதி அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார். ஏனைய நிர்வாக சபை உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

வடமாராட்சி வலய கல்விப்பணிப்பாளர் திரு. சி. நந்தகுமார் அவர்கள் தமது உரையில் விஞ்ஞான கணித பாடங்களின் அவசியத்தை மிக விளக்கமாக குறிப்பிட்டிருந்தார். இனிவரும் காலங்களில் மாணவர்கள் கணிதப்பிரிவு விஞ்ஞானப்பிரிவு மூன்றாவதாக தொழில்நுட்பப்பிரிவு கல்வியினை கற்கவேண்டிய கட்டாயம் உள்ளது என்பதனையும், கலைப்பிரிவு கல்வியினைக்கற்று எதுவித பயனும் இல்லை என்று உலகம் என்றோ தீர்மானித்துவிட்டது. ஆனால் இலங்கை அதனை இன்றுதான் உணர்கின்றது என்பதனையும் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து தனது உரையில் தற்போது எமது மாணவர்களில் 22 வீதமான மாணவர்கள் கணித விஞ்ஞான பிரிவிலும் 27 வீதமான மாணவர்கள் வர்த்தக பிரிவிலும் 55 வீதமான மாணவர்கள் கலைப்பிரிவிலும் கற்றுக்கொண்டிருக்கின்றார்கள் என்று குறிப்பிட்டதுடன் இந்தக்கலைப்பிரிவில் கற்கும் மாணவர்களே எதிர்காலத்தில் பல்கலைக்கழக அனுமதி, வேலையில்லாப்பிரச்சனை போன்ற பல சவால்களுக்கு முகம்கொடுக்கவேண்டியவர்களாகவும் இருக்கப்போகின்றார்கள் என்றும் குறிப்பிட்டார். கணித விஞ்ஞான தொழில்நுட்பப்பிரிவுகளில் கற்கும் மாணவர்களின் வீதத்தினை உயர்த்துவதே நமது நோக்கம். அதற்காக இரவு பகலாக மிகவும் பாடுபடுவதாக கல்விப்பணிப்பாளர் தெரிவித்தார்.
மாணவர்களை தொழில்நுட்பக்கல்வியினை நோக்கி நகர்த்தும் பணிகளை தாம் தொடருவதாகவும் தெரிவித்தார்.