ஆராதனை மண்டப திருத்த வேலைகள் ஆரம்பம்.

18-01-2014 (9)பல தசாப்த காலமாக சிதைந்திருந்த கல்லூரியின் பிரதான மாடி கட்டிடத்தை புனரமைத்து தருமாறு பாடசாலை சமூகத்தினால் பல முறை கோரிக்கை விடப்பட்டது. விஞ்ஞான ஆய்வு கூடங்கள் மற்றும் புதிய கழிப்பறைகளை மிகவும் குறுகிய காலபகுதியில் நிர்மாணித்த CWN, மாகாண கல்வி அமைச்சின் அனுமதியுடன் இவ்வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.


 
லண்டனில் இருந்து கல்லூரியை பார்வையிட வந்திருந்த சுவாமி ராஜேந்திரா மாஸ்டர் மற்றும் ஜெகன் ராஜேந்திரா 2012 இல் சிதைந்து போயிருந்த விஞ்ஞான ஆய்வு கூடங்களையும் ஆராதனை மண்டபத்தையும் திருத்தும் செயல் திட்டங்களை ஆரம்பித்தனர்.
 
லண்டனில் CWN ஆரம்பிக்கபட்டு மிகவும் குறுகிய காலத்தில் நவீன ஆய்வு கூடங்கள் அமைக்கபட்டு புதிய கழிப்பறைகளும் நிர்மாணிக்கப்பட்டன. 

இதன் தொடர்ச்சியாக வேகமாக வளர்ந்து வரும் விஞ்ஞான உலகிற்கு மாணவர்களை தயார்படுத்துமுகமாக இவ் ஆராதனை மண்டபம் திருத்தி அமைக்கபடுகின்றது. 
 
அண்மையில் லண்டனில் நடைபெற்ற 73 batch ஒன்று கூடலில் ஆராதனை மண்டப திருத்த வேலைகளுக்கு £1500.00 வழங்குவதாக தீர்மானிக்கபட்டது.