வடமராட்சி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்டச்சுற்றுத்தொடரில் இன்று நடைபெற்ற போட்டிகளில் 14 ஆம் மற்றும் 16 வயதுப்பிரிவுகள் வெற்றிபெற்றது.

வடமராட்சி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்டச்சுற்றுத்தொடரில் இன்று(06-11-2013) நடைபெற்ற  16 வயதுப்பிரிவிற்கான  சுற்றுப்போட்டி இமையாணன் இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. இதில் எமது கல்லூரி பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியுடன் மோதியதில், 1:0 என்ற கோல் கணக்கில் ஹாட்லிக் கல்லூரியை வென்றது.

 

மேலும்,14 வயது பிரிவிற்கான  சுற்றுப்போட்டி நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இதில் எமது கல்லூரி மருதங்கேணி மகா வித்தியாலயத்துடன் மோதியதில், 1:0 என்ற கோல் கணக்கில் மருதங்கேணி மகா வித்தியாலயத்தினை வென்றது.