சிதம்பராக்கல்லூரி அதிபரின் வீட்டிற்கு முறையின்றி சென்ற பழையமாணவர்கள் [வல்வெட்டித்துறை பழையமாணவர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை]

1.9.2013 ம் திகதி நடைபெறவிருந்த பொருளாளர் தெரிவிற்கான விசேட பொதுக்கூட்டம் பிற்போடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாவலடியில் வசிக்கும் அதிபரின் வீட்டிற்கு சுமார் 15 பழையமாணவர்கள் கூட்டமாக சென்றனர். கூட்டம் பிற்போடப்பட்டதற்கான காரணத்தை மரியாதையின்றி கூச்சல் போட்டுக்கேட்டனர். இந்தியாவிலிருந்து வருகைதந்திருந்த தியாகராஜா முரளிதரன் என்பவர்

இந்த அதிபர் புதிய விஞ்ஞான ஆய்வுகூட மற்றும் கழிப்பறைகள் அமைத்ததில் மோசடி செய்தவர் என்று அயலவர்கள் மற்றும் அவருடன் வருகைதந்திருந்தவர்களுக்கு முன்னிலையில் ஆதாராமற்ற குற்றச்சாட்டுகளை ஆவேசத்துடன் தெரிவித்தார். சென்ற வருடம் மூன்று தடவை பொதுக்கூட்டங்கள் பிற்போடப்பட்டது. இதன்போது இந்த 15 பழையமாணவர்கள் அப்போதிருந்த பழையமாணவர் சங்கத்தலைவரிடம் எது வித காரணங்களோ கேள்விகளோ கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய பொருளாளர் ஒருவரை தெரிவுசெய்வதற்கு மட்டும் கூட்டப்படவிருந்த விசேடபொதுக்கூட்டம் தகுந்தகாரணங்களினால் பிற்போடவேண்டிநேரிட்டதை நாம் இங்கே குறிப்பிட விரும்புகின்றோம். இதற்காக எமது நிர்வாக சபை மனவருத்தத்தைத் தெரிவிக்கும் அதே சமயம் இந்த சிறியதொரு விடயத்திற்காக மரியாதைக்குரிய ஒரு கல்லூரியின் அதிபரின் வீடு தேடிச்சென்று இத்தகைய அநாகரீக செயற்பாடுகளை மேற்கொண்டதன் மூலம், இவர்கள் எதனை சாதிக்கவிரும்பிகின்றார்கள்? இவர்களா கல்லூரியின் முன்னேற்றத்திற்கு உழைக்கப்போகின்றார்கள்? என்ற வினாக்களையும் கேட்க விரும்புகின்றோம்.

எனவே இத்தகைய நாகரீகமற்ற செயற்பாடுகளை மேற்கொள்வதை தவிர்ப்பது எமது கல்லூரியின் முன்னேற்றத்திற்கும் எமது ஊரின் முன்னேற்றத்திற்கும் சிறப்பானது என்பதினைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

செயலாளர்
கோ. சற்குணபாலன்
சிதம்பராக்கல்லூரி பழையமாணவர் சங்கம்
வல்வெட்டித்துறை

vvt-oba-letter25-09-2013