சிதம்பராக்கல்லூரி ஆராதனை மண்டபத்தை புனரமைக்க Children's Well-wishers Network (CWN) முன்வந்துள்ளது.

DSC 3220பல தசாப்த காலமாக சிதைந்திருந்த கல்லூரியின் பிரதான மாடி கட்டிடத்தை புனரமைத்து தருமாறு பாடசாலை சமூகத்தினால் பல முறை கோரிக்கை விடப்பட்டது. விஞ்ஞான ஆய்வு கூடங்கள் மற்றும் புதிய கழிப்பறைகளை மிகவும் குறுகிய காலபகுதியில் நிர்மாணித்த CWN, இவ்வேலைத்திட்டத்தை சிதம்பராக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினூடாக நிறைவேற்றும் என்று சுவாமி ராஜேந்திரா மாஸ்டர் அறிவித்துள்ளார். விஞ்ஞான கருத்தரங்குகள் நடத்தக் கூடிய தொழில்நுட்ப வசதிகளுடன் கற்றோடமுள்ள ஆராதனை மண்டபமாக இது திருத்தியமைக்கப்படவுள்ளது. லண்டனில் இருந்து Multimedia Projector and Mounting kit ஏற்கனவே தருவிக்கபட்டுள்ளது.

 

முப்பது வருடங்களுக்கு முன்பு கணித விஞ்ஞான தொழில்நுட்ப கண்காட்சிகள், விஞ்ஞான குறும்படங்கள் இந்த ஆராதனை மண்டபத்தில் காண்பிக்கபட்டது. வேகமாக வளர்ந்து வரும் விஞ்ஞான உலகிற்கு மாணவர்களை தயார்படுத்துமுகமாக ஆராதனை மண்டபம் அமைக்கப்படும். மாணவர், ஆசிரியர் மற்றும் பெற்றோர் மிகவும் பயன்படுத்தக்கூடிய வகையில் ஓர் முன்மாதிரியாக இது விளங்கும்.