புனரமைக்கப்படவேண்டியுள்ள சிதம்பராக்கல்லூரி ஆராதனை மண்டபமும் வகுப்பறைகளும்.

DSC 3221எமது பாடசாலையின் அடித்தளமாக விளங்கும் இந்த மாடிக்கட்டடம் புனரமைப்பினை வேண்டிநிற்கின்றது. வடமராட்சியின் சகல பாடசாலைகளினதும் இத்தகைய தாய்க்கட்டடங்கள் கம்பீரமாக காட்சியளிக்கையில் எமது பாடசாலையின் இந்த தாய்க்கட்டடமானது ஆராதனை மண்டபத்தையும் வகுப்பறைகளையும் கொண்டு சிதைந்த நிலையில் காணப்படுகின்றது.

எமது CWN (Chithambara well-wisher Network) இன் முந்தய திட்டப்பணிகள் பூர்த்தியாகி ஆய்வு கூடங்களும் மாணவர் மலசல கூடங்களும் எமது புதிய மாடிக்கட்டமும் கம்பீரமாக காட்சியளிக்ககையில் மேற்படி எமது அடித்தளமான பிரதான மாடிக்கட்டடம் புனரமைக்கப்படவேண்டியது காலத்தின் தேவையாகும்.

இந்த வகையில் CWN அமைப்பும் எமது பாடசாலை பழையமாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் இந்தக்கட்டடத்தை புனரமைத்துத்தர முன்வருவார்கள் என பாடசாலைச்சமூகம் எதிர்பார்த்து நிற்கின்றது.