சிதம்பராக்கல்லூரி பழைய மாணவர்கள் கல்லூரியை பார்வையிட வருகை தந்திருந்தனர்.

P P VISIT 2013 (23)உலகெங்கும் பரந்து வாழும் வல்வை மக்கள் ஒன்று திரண்டு வல்வை முத்துமாரி அம்மனை தரிசிக்க இங்கு வருகை தந்திருந்தனர். இச்சந்தர்ப்பத்தில் தாங்கள் கல்வி கற்ற சிதம்பராக்கல்லூரியை பார்வையிட பழைய மாணவர் தாய் சங்கம் ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தது. வட மாகாணத்தில் முதல் தரமாக அமைந்துள்ள விஞ்ஞான ஆய்வுகூடம் மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பௌதீக வளங்கள் கணணி வலையமைப்பு இணையதளம் மின்பிறப்பாக்கி அவற்றின் பயன்பாட்டை நேரடியாக பார்வையிட்டனர்.

 மேலும் கல்வி மற்றும் அனைத்து விடயங்களிலும் பரிணாமம் பெற்று வரும் தாம் கல்விகற்ற பாடசாலைக்கு வருகைதந்து, கல்லூரியின் அதிபர் மற்றும் பழையமாணவர் சங்கத்தினரை நேரடியாக சந்தித்ததையிட்டு பெருமகிழ்வடைந்தனர். அத்தோடு அறிவுபூர்வமான சிந்தனைகளையும் ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் பகிர்ந்து கொண்டனர். இவ்வாறான ஓர் நிகழ்வு பல வருடங்களிற்கு பின்னர் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.