வல்வெட்டித்துறை சிதம்பராக்கல்லூரி பழையமாணவர் சங்க முதலாவது நிர்வாகசபை கூட்டம் – 25-02-2013

26-02-20131வல்வெட்டித்துறை சிதம்பராக்கல்லூரி பழையமாணவர் சங்கத்தின் முதலாவது மாதாந்த நிர்வாகசபைக்கூட்டம் கல்லூரிமண்டபத்தில் 25-02-2013 திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. மேலும் இக்கூட்டத்தில் சிதம்பராக்கல்லூரியின் கல்வி மற்றும் இணைபாடவிதான செயற்பாடுகள் தொடர்பான தேவைகள் கலந்துரையாடப்பட்டு முடிவுகள் எட்டப்பட்டது. 

கல்லூரியின் தேவைகள் மற்றும் விடயங்கள் தொடர்பாக அதிபர் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோருக்கு வேண்டிய ஒத்துழைப்பை வழங்குவதெனவும், பாடசாலைவளர்ச்சி தொடர்பில் அதற்கு வேண்டிய சில செயற்திட்டங்களை கிரமமானமுறையில் மேற்கொள்வதெனவும், அனைத்து அங்கத்தவர்களும் ஒருமித்து தனது ஆதரவை வெளிப்படுத்தினர். 

மேலும் நிர்வாக சபைக்கூட்டம் மாதாந்தம் கூட்டப்படவேண்டும் எனவும், கணக்கறிக்கை இரண்டு மாதங்களுக்கொருமுறை செயற்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டு பின்னர் கல்லூரியின் இணையத்தளமான www.chithambaracollege.org இல் பிரசுரிக்கப்படுமெனவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

நன்றி

திரு. கோ. சற்குணபாலன்
செயலாளர்
சிதம்பராக்கல்லூரி பழையமாணவர் சங்கம்
வல்வெட்டித்துறை