நிறுவுநர் தினமும் பரிசளிப்பு விழாவும் -2013

ccpg 2013 (26)எமது கல்லூரியின் 2012 ஆம் ஆண்டிற்கான பரிசளிப்பு மற்றும் நிறுவனர் தின விழா  இன்று(11-11-2013) திங்கட்கிழமை பாடசாலை அதிபர் திரு.கி.இராஜதுரை அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ் நிகழ்வின் பிரதம விருந்தினராக திரு.சிவபாதம் நந்தகுமார் (வலயக் கல்விப் பணிப்பாளர், வடமராட்சி) அவர்களும், மற்றும் சிறப்பு விருந்தினராக திரு.கந்தர் பொன்னையா (கோட்டக் கல்விப் பணிப்பாளர், மருதங்கேணி) அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.நிறுவுனர் தின உரையினை, சிதம்பராக்கல்லூரி பழையமாணவரும், முன்னாள் காட்லிக் கல்லூரி ஆசிரியரும், கொழும்பு (ஆண்கள்) இந்துக்கல்லூரியின் ஓய்வுநிலை பிரதி அதிபரும், வடமராட்சி வடக்கு முதியோர் பேரவைத் தலைவரும், எமது கல்லூரி பழையமாணவர் சங்கத்தின் உபதலைவருமாகிய திரு.சிவா.கிஷ்ணமூர்த்தி அவர்கள் வழங்கியிருந்தார். இவ்விழாவிற்கு எமது கல்லூரி பழையமாணவர் சங்கம் அனுசரணையினை வழங்கியிருந்தது.