நிறுவுநர் தினமும் பரிசளிப்பு விழாவும் [2010/2011] --- 11-11-2012]

இன்று [11-11-2012] வல்வெட்டித்துறை சிதம்பராக் கல்லூரியின் நிறுவனர் தினமும், பரிசளிப்பு விழாவும், பாடசாலை அதிபர் திரு. கி. இராஜதுரை அவர்கள் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது.

 

இவ்விழாவின் பிரதம விருந்தினராக திரு.R.S.சிவசுப்ரமணியம் (ஓய்வு பெற்ற ஏற்றுமதி, இறக்குமதி கட்டுப்பாட்டாளர்) அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக திரு.S.ராமசந்திரன் (கோட்டக் கல்விப் பணிப்பாளர், பருத்தித்துறை) அவர்களும், திரு.V.வேலும் மயிலும் (ஓய்வு பெற்ற பிரதேச செயலர்) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.