சிதம்பராக்கல்லூரி பழையமாணவர் சங்கம் - வல்வெட்டித்துறை

14-02-2014  நடைபெற்ற பழையமாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட புதிய நிர்வாகசபை.

காப்பாளர்கள்: திரு. K. இராஜதுரை (அதிபர்)
                      திரு. Dr. க. மயிலேறும்பெருமாள் (மாவட்ட வைத்திய அதிகாரி)               

 

 

 தலைவர் :  திரு. சா. சிறீபதி

 உப தலைவர்கள்: திரு. இ. அமரசேனாதிபதி

                           திரு. ச. சின்னத்தம்பு 

 

செயலாளர் : திரு. கு. சந்திரகுமார்

உபசெயலாளர் : திரு. மு. இரவீந்திரன்

பொருளாளர் : திரு. சி. தங்கேஸ்வரராஜா 

 

செயற்குழு உறுப்பினர்கள்

திருமதி. ப. சரோஜினிதேவி

திரு. பொ. சிவஞானசுந்தரம்

திரு. தி. சித்திரவேல்

திரு. சி. பரமசிவம்

திரு. மு. தங்கவேல்

திரு. சி. சோதிமயம்

திரு. க பாலசிங்கம்

திரு. சி. ராஜ்குமார்

திரு. ம. சுந்தரதேவன்

 

 

சிதம்பராக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் - வல்வெட்டித்துறை- அமைப்பு விதிகள் (யாப்பு)

01. பெயர்:- இச் சங்கம் "சிதம்பராக்கல்லூரி பழைய மாணவர் சங்கம்" என அழைக்கப்படும்.

02. நோக்கம் :-

(அ ) கல்லூரியின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் தொழிற்படல்.

(ஆ) கல்லூரியில் இருந்து விலகும் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு, ஆலோசனை வழங்குதல்.

(இ) முறைசாரக் கல்விக்கு ஊக்கமளித்து உதவுதல்.

(ஈ) சங்கத்தின் உறுப்பினர்கள் வருடத்திற்கு ஒரு தடவையேனும் சந்திப்பதற்கு ஒழுங்கு செய்தல்.

03. உறுப்புரிமை :- கல்லூரியில் கல்வி கற்ற எல்லா பழைய மாணவர்களும் உறுப்பினராவதற்கு உரித்துடையவராவர்.

04. சந்தாப்பணம் :-

(அ) சாதாரண உறுப்பினர் .

ஒவ்வொரு வருட ஆரம்பத்திலும் சந்தாப்பணமாக ரூ (50.00) ஐம்பதை செலுத்தி சாதாரண உறுப்பினராக சேர்ந்து கொள்ளலாம். அடுத்துவரும் வருடங்களில் மார்ச் 31 ஆம் திகதிக்கு முன் சந்தாப்பணத்தை கட்டத்தவறின் நிர்வாகசபை தீர்மானிக்கும் பட்சத்தில் உறுப்பினர் தனது உறுப்புரிமையை இழந்தவராகக் கருதப்படுவர்.

(ஆ) ஆயுட்கால உறுப்பினர்

சங்கத்தின் உருப்பினராவதற்குத் தகுதியுடைய ஒவ்வொருவரும் பத்து வருடங்களுக்கான சந்தாத் தொகையை ஒரே தடவையில் செலுத்தி ஆயுட்கால உறுப்பினராக சேர்ந்து கொள்ளலாம்.

(இ) சாதாரண உறுப்பினரும், ஆயுட்கால உறுப்பினரும் ஒரே சலுகைகளையும், உரிமைகளையும் அனுபவிப்பர்.

05. காப்பாளர் :-

ஒவொரு வருடாந்தப் பொதுக்கூட்டத்திலும் சபையின் விருப்பதிட்கமைய சங்கத்தால் ஐவர்(5) காப்பாளர்களாக தெரிவு செயப்படுவர்.

06. சங்கத்தின் நிர்வாக அங்கத்தவர்களும் செயற்பாடுகளும்:-

(அ )வருடாந்த பொதுக்கூட்டத்தில் பங்குபற்றும் அங்கத்தவர்களிடையே இருந்து பின்வரும் நிர்வாக அங்கத்தவர்கள் தெரிவுசெயப்படுவர்.

1.தலைவர்

2.உப தலைவர் - இருவர்

3.செயலாளர்

4.உப செயலாளர்

5.பொருளாளர்

6.ஒன்பது (09) சாதாரண செயற்குழு அங்கத்தவர்கள்.

(ஆ) நிர்வாகசபை குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூடும். கூட்டத்திற்கு ஏழு நாட்களுக்கு முன்னறிவித்தல் கொடுக்கப்படவேண்டும்.

(இ) அவசர தேவை ஏற்படின் மூன்று நாட்கள் முன்னறிவித்தல் கொடுத்து, நிர்வாகசபை மேலதிகமாக கூடலாம்.

(ஈ) நிர்வாகசபை உறுப்பினர்களில் ஐந்து பேருக்குக் குறையாமல் எழுத்து மூலம் கோரும் பட்சத்தில் நிர்வாக சபை கூடும்.

(உ) நிர்வாக சபை கூடுவதற்கு பெரும்பான்மை அங்கத்தவர்கள் பங்கு பற்ற வேண்டும்.

(ஊ) நிர்வாகசபை கூட்டங்களுக்கு தொடர்ந்து மூன்று முறை சமூகமளிக்காத அங்கத்தவர் தாமாகவே பதவி விலகியதாக கணிக்கப்பட்டு அவ வெற்றிடம் நிர்வாக சபையால் நிரப்பப்படும்.

07. வருடாந்த பொதுக்கூட்டம் :-

ஒவோரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் கூட்டப்படல் வேண்டும். கூட்டத்திற்கு பத்து நாட்கள் முன் அறிவித்தல் கொடுக்கப்பட வேண்டும்,

08. விசேட பொதுகூட்டம் :-

பின்வரும் சந்தர்பங்களில் விசேட பொதுக்கூட்டம் கூடபாடல் வேண்டும்.

(அ) அங்கத்தவர்களின் எண்ணிக்கையில் முப்பது அல்லது அரைவாசி இதில் எது குறைவோ அவ் எண்ணிகையில் எழுத்து மூலமான தேவைக்கோரிக்கையை விடுத்திருந்தால்இ

(ஆ) நிர்வாகசபை தீர்மானிக்கும் பட்சத்தில்இ இக்கூட்டத்திற்கு ஏழு நாட்கள் முன்னறிவித்தல் கொடுக்கப்படல்வேண்டும்.

09. ஆண்டுப் பொதுக்கூட்டத்திற்கு நிறைவெண் :-

வருடாந்த பொதுக்கூட்டத்திற்காக நிறைவெண் முப்பது(30) அல்லது மொத்த அங்கத்தவர்களின் எண்ணிக்கையிற் கால்வாசி, இதில் எது குறைவோ அவ் வெண்ணாக இருக்கும்.

10. ஆண்டுப்பொதுக்கூட்ட நடைமுறைகள்:-

பின்வரும் நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படும்.

(அ) செயலாளரால் சமர்ப்பிக்கப்பட்ட ஆண்டறிக்கையை ஏற்று உறுதிப்படுத்தல்.

(ஆ) பொருளாளரால் சமர்ப்பிக்கப்பட்ட ஆண்டுக்கணக்குகளைப் பரீசீலனை செய்து ஏற்றுக்கொள்ளுதல்.

(இ) நிர்வாகசபை அங்கத்தவர்களைத் தெரிவுசெய்தல்

(ஈ) சங்கத்தின் கணக்குகளைக் கணக்காய்வு செய்வதற்கு இரு கௌரவ கணக்காய்வாளர்களைத் தெரிவுசெய்தல்.

(உ) பிரேரணைகள் ஏதும் இருப்பின் அவற்றைப் பரிசீலனை செய்து ஏற்றுக்கொள்ளுதல் அல்லது நிராகரித்தல். பிரேரணைகள் பொதுக்கூட்டத்திற்கு எழு நாட்களுக்கு முன் செயலாளரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

(ஊ) வேறுவிடயங்கள் ஏதும் இருப்பின் அவற்றை ஆராய்தல், ஏற்றுக்கொள்ளுதல் அல்லது நிராகரித்தல்.

11. தீர்மானங்கள் நிறைவேற்றுதல்:-

(அ) வருடாந்த பொதுக்கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களிற்கு சாதாரண பெரும்பான்மை போதுமானது.

(ஆ) விசேட பொதுக்கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் அக்கூட்டத்தில் சமுகமளித்தவர்களின் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு(2/3) பங்கு பெரும்பான்மை மூலம் நிறைவேற்றப்படல் வேண்டும்.

(இ) நிர்வாகசபையில் எடுக்கப்படும் தீர்மானங்களிற்கு சாதாரண பெரும்பான்மை போதுமானது.

12. செயலாளர் கடமைகள்:-

செயலாளர் சங்கத்தின் வருடாந்த, விசேட, நிர்வாக சபை கூட்டங்களை கூட்டுவதுடன், அக்கூட்டங்களின் நிகழ்ச்சிக்குறிப்புக்களை பேணுவதற்கும், சகலகடிதத்தொடர்புகளை கவனிப்பதற்கும,; நிர்வாகசபையில் ஏற்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கும், அவ்வப்போது சங்கத்தால் அவருக்கு பொறுப்பளிக்கப்படும் அலுவல்களைக் கவனிப்பதற்கும் பொறுப்பாக இருப்பார்.

13. பொருளாளர் கடமைகள்:-

(அ) பொருளாளர் சங்கத்தின் உறுப்பினர்களின் பெயர்களையும் தற்காலிக, நிரந்தர முகவரிகளையும் விபரங்கள் யாவும் அடங்கிய பதிவேடு ஒன்றைப்பேணுவதுடன் சங்கத்தின் வரவு செலவு அடங்கிய பதிவேடு ஒன்றைப்பேணுவதுடன் சங்கத்தின் வரவுசெலவு அடங்கிய காசேடு ஒன்றையும் பேணவேண்டும்.

(ஆ) பெறப்படும் பணத்திற்கான பற்றுச்சீட்டுக்கள் இயந்திர இலக்கமிடப்பட்டதும், அச்சிடப்பட்டதும், இருமடித்தாள் கொண்டதுமான பற்றுச்சீட்டுப்புத்தகங்களிலிருந்து வழங்கப்படல்வேண்டும்.

(இ) சகல கொடுப்பனவுகளும், கொடுப்பனவைபெறுபவரின் பணம் பெறுவதற்கான பற்றுச்சீட்டுடன் இருக்கவேண்டும்.

(ஈ) மக்கள் வங்கி, வல்வெட்டித்துறை கிளையில் சங்கத்தின் பெயரில் கணக்கொன்றைத்திறந்து, சங்கத்தின் சார்பில் பெற்றுக்கொள்ளும் பணத்தில் ரூபாய் ஆயிரத்து ஐந்நூறு (ரூ.1500) தவிர மீதிப்பணம் யாவற்றையும் காலத்திற்கு காலம் அவ்வங்கிக்கணக்கில் இட வேண்டும்.

(உ) பொருளாளர் சங்கத்திற்கு சொந்தமான பணத்தில் கையிருப்பு பணமாக ரூபாய் ஆயிரத்து ஐந்நூறு (ரூ.1500) இற்கு மேல் எந்நேரத்திரும் வைத்திருத்தல் ஆகாது.

(ஊ) பொருளாளர் ஒவ்வொரு நிர்வாகசபைக்கூட்டத்திலும் மாதாந்த வரவு செலவுக்கணக்கை சமர்ப்பிக்கவேண்டும்.

(எ) பொருளாளர் ரூபாய் ஆயிரத்து ஐந்நூறு (ரூ. 1500) இற்கு மேல் ஒருமாதத்தில் செலவு செய்தலாகாது. தலைவர் அல்லது செயலாளரின் ஒப்புதலுடன் ரூபாய் ஐயாயிரம் (ரூ. 5000) வரையில் செலவு செய்யலாம். ஒரு மாதத்தில் ஐயாயிரம் (ரூ. 5000) ரூபாயிற்கு மேல் செலவு ஏற்படின் நிர்வாக சபையின் முன் அனுமதி பெற வேண்டும்.

(ஏ) வங்கியில் வைப்பு, மீளப்பெறல் நடைமுறைகளை பொருளாளருடன், தலைவரோ அன்றி செயலாளரோ இருவருடைய ஒப்பந்தத்துடன் செயற்படவேண்டும்.

14. அமைப்பு விதிகளில் மாற்றம்:-

பொதுக்கூட்டமொன்றில் அல்லது விசேட பொதுக்கூட்டம் ஒன்றில், நிகழ்ச்சிநிரல் சேர்க்கப்பட்டு அக்கூட்டத்தில் சமூகமளித்தோரால் மூன்றில் இரண்டு (2/3) பங்கினர் சாதகமாக வாக்களிக்காவிடின் அமைப்பு விதிகளில் மாற்றமோ, திருத்தமோ செய்ய இயலாது.

குறிப்பு:- சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் 12.04.1998 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றபோது முன்னைய சட்டப்பிரமாணங்கள் (அமைப்பு விதிகள்) ஆராயப்பட்டு இதிலுள்ளவாறு சிலதிருத்தங்களுடன் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

(சூ. சே. குலநாயகம்) (பூ. அகமணிதேவர்)

தலைவர் செயலாளர்