வருடாந்த பரிசளிப்பு விழாவுக்கு தயாராகும் வல்வை சிதம்பராக்கல்லூரி சமூகம்.

Auditoriumசிதம்பராக்கல்லூரி வருடாந்த பரிசளிப்பு விழா 2017 நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணியளவில் கல்லூரி மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. வகுப்பு ரீதியாக முதன்நிலை பெற்ற மாணவர்கள், மாகாண மற்றும் மாவட்ட போட்டி நிகழ்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், பல்கலை கழகங்களுக்கு தெரிவானவர்கள் அனைவருக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படவுள்ளனர்.

சிதம்பரக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் (International) செயற்பாட்டு அறிக்கை (01/03/2017)

சிதம்பராகல்லூரி சர்வதேச பழைய மாணவர் சங்கம் லண்டனில் சட்ட பூர்வமாக பதிவு செய்யப்பட்டு கல்லூரியின் அபிவிருத்தி பணிகளில் நேரடியாக செயலாற்றிவருகின்றது. 2016 ஆம் ஆண்டு உயர்தரத்தில் கணித விஞ்ஞான பிரிவுகளில் மருத்துவ பீடத்திற்கு இரு மாணவர்கள் தகுதியானது பழையமாணவர் மற்றும் வல்வை மக்களுக்கு கல்வி அபிவிருத்தி பணியில் மிகுந்த நாட்டமேற்பட்டுள்ளது. கல்விமான்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்களின் பங்களிப்புடன் மேலும்

வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி-2017

Sports 2014 12எமது கல்லூரியின் இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டி இன்று 05.02.17 ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் திரு.குருகுலலிங்கம் தலைமையில் போட்டிகள் பிற்பகல் 1.30pm மணிக்கு பாடசாலை மைதானத்தில் ஆரம்பமாகியது.

க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகள் 2016. இரு மாணவர்கள் மருத்துவதுறைக்கு செல்லவுள்ளனர்.

10293689 10152410759407491 7959654652954983370 oதற்போது வெளியான க.பொ.த. உயர் தர பரீட்சை பெறுபேறுக்கு அமைவாக இருபது வருடங்களின் பின்பு இரு மாணவர்கள் சிதம்பராக்கல்லூரியில் கல்வி பயின்று மருத்துவதுறைக்கு செல்லவுள்ளனர்.

Biology
K.Karunaruban 2A, B
M.Puvithra A, 2B
Y.Abirami B, 2C

Arts
R.Thasanthinii A, 2C

யுத்த சூழ்நிலை காரணமாக க.பொ.த உயர்தர கணித விஞ்ஞான பிரிவுகள் நிறுத்தப்பட்டு வல்வெட்டித்துறை கல்வியில் பெருமளவு வீழ்ச்சியடைந்திருந்தது. 2011 VEDA நிர்வாக சபை உறுப்பினர்கள், சிதம்பராகல்லூரி பழையமாணவர் சங்க செயலாளர் மற்றும் பெற்றோர்கள் வலய கல்வி பணிப்பாளரை சந்தித்து கணித பிரிவுகளை ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து பல வருடங்களாக இடை நிறுத்தப்பட்டிருந்த க.பொ.த உயர்தரம் மூன்று கணித பிரிவு மாணவர்களுடன் மீண்டும் 2012 இல் ஆரம்பிக்கபட்டது.

2012 இல் லண்டனில் இருந்து சென்ற சுவாமி ராஜேந்திரா மாஸ்டரினால் சிதம்பரா பழைய மாணவர்கள் நலன்விரும்பிகள் பங்களிப்புடன் மிகச்சிறந்த விஞ்ஞான ஆய்வுகூடங்கள் கணனி தொடர்பாடல் மற்றும் நவீன கழிப்பறை வசதிகள் என்பன குறுகிய காலப்பகுதிக்குள் அபிவிருத்தி செய்யப்பட்டது. தற்போது பொறியியல், மருத்துவ துறைகளுக்கு வல்வை மாணவர்கள் சிதம்பராக்கல்லூரியில் கல்வியை தொடர முழு வசதிகளும் தரப்பட்டுள்ளது.

கடுமையான முயட்சி செய்து பாடசாலைக்கு நற்பெயரினைத் தேடிக்கொடுத்த மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர் ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

கல்லூரியில் நிறுவனர் தினமும் பரிசளிப்பு விழாவும் இன்று இடம்பெற்றது

கல்லூரியின் நிறுவனர் தினமும், பரிசளிப்பு விழாவும் இன்று(11.11.2016) நடைபெற்றது. நிகழ்வுகள் பாடசாலை அதிபர் திரு.குருகுலலிங்கம் தலைமையில் ஆரம்பமானது.

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திருமதி தவமலர் சுரேந்திரநாதன் (பழைய மாணவர்) அவர்களும்,

வல்வை நலன்புரிசங்கம் (ஆஸ்திரேலியா ) சிதம்பராகல்லூரி காணி கொள்வனவுக்கு நிதி உதவி அளிக்க முன்வந்துள்ளது.

watermarked-VNS-Australiaஆஸ்திரேலியா வல்வை நலன்புரி சங்கதின் 12 வது நிர்வாகசபை கூட்டம் 18-09-2016 அன்று காலை 11 மணியளவில் Toongabbie, Sydney இல் நடைபெற்றது. அதிபர் திரு குருகுலலிங்கம் மற்றும் வல்வை பழைய மாணவர் சங்க நிர்வாக சபையினரின் மின்னஞ்சல் கடிதங்களை பரிசீலித்த நிர்வாக சபையினர்

புதிய மாடி கட்டிடத்துக்காக 4 பரப்பு நில கொள்வனவு

"அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை”  என்ற புதிய செயல்த்திட்டம் 2016 இல் சிதம்பராக்கல்லூரி இணைக்கபட்டுள்ளது தங்கள் அறிந்தது. நகரப்புற பிரபல்ய பாடசாலைகளில் உள்ள பௌதீக, மானிட, உட்கட்டமைப்பு,  சிறந்த பயிற்சியுள்ள ஆசிரியர்கள் போன்ற வசதிகளை சிதம்பராக்கல்லூரியில் வழங்குவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. புதிய மாடி கட்டிட அமைப்புக்காக 15 மில்லியன் ரூபா  கல்வி அமைச்சினால் ஒதுக்கப்பட்டு

வல்வெட்டித்துறை சிதம்பராக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் புதிய உறுப்பினர்களின் விபரம்

வல்வெட்டித்துறை சிதம்பராக்கல்லூரி பழைய மாணவர்ச ங்கத்தின் 2016 ம் ஆண்டிற்கான பொதுக் கூட்டமானது கடந்த மாதம் 20.03.2016 ஞாயிற்றுக் கிழமை காலை 10.30 மணிக்கு சிதம்பராக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

பழைய மாணவர் சங்க தலைவர் சிறிபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தலைவர் உரை மற்றும் செயலாளர் கணக்கறிக்கைகளைத் தொடர்ந்து புதிய நிர்வாக அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்டது.